டெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள், சோதனை என மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

எனினும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்த மாணவர்கள் இதை பொருட்டாக கருதாமல் தேர்வு எழுதினர். இதில் கேள்விகள் சுலபமாக இருந்ததாக கூறியிருந்தனர்.

ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு அன்றைய தினம் தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக அவர்களுக்கு 20-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வுக்கு 15.19 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுள் 14.10 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in , www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் இன்று வெளியிடப்படவுள்ளன.


ஒடிஸா மாநிலத்தில் தாமதமாக நீட் தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த மாநில முடிவுகளும் இன்று வெளியிடப்படும் என்றே தெரிகிறது


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here