*சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜூன் 20) தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் திருப்பூர் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.*


*நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.*

 *இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.*

*புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம்.*


*வருகிற 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.*


*தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.*

*இதில் திருப்பூர் மாணவர் நந்தகுமார் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.*





Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here