மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், "தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாக இருக்கும். புதிய பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, வெளியிட காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தமிழக பள்ளி மாணவர்களிடம்இந்தி திணிப்பு ஒருபோதும் இருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவேஇந்த கேள்விக்கே இங்கு இடமில்லை.

தற்போது தமிழ், திராவிடம் என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு முன்னதாகவே ஜெயலலிதா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனவே, தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிப்பு இருக்காது என்பதை நானும் தெளிவாகக் கூறுகிறேன்" என்றார்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here