திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆண்டில் மாவட்ட அளவில் தேசிய வருவாய்வழி திறனறிவுத் தேர்வில் முதலிடம் பிடித்த எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 11 பேருக்கு, அவர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டி, S2S திட்டத்தின்கீழ் துபாய்வாழ் கல்வியாளர் இரவி சொக்கலிங்கம் அவர்கள் மூலமாகப் பெறப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கத்தார்வாழ் ஹாஜா அவர்கள் வழங்கிய ஆங்கில அகராதி ஒன்றும்  பள்ளி வளாகத்தில் திரளாகக் குழுமியிருந்த மாணவர்கள் முன்னிலையில் மகிழ்வித்து மகிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைைவர் மணி கணேசன் அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைைைப் பள்ளித் தலைமை ஆசிரியை லெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஆனந்த், ஜோதி, கோகிலா, விவேகானந்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்போட்டித் தேர்வில் சிறப்பிடம் பெற்று வரும் எங்கள் பள்ளி வெற்றியாளர்களுக்கு முதன்முறையாக பரிசும் பாராட்டும் கிடைக்கக் காரணமாக இருந்த ஆசிரியர் மணி கணேசன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆசிரியர்களும் கூடியிருந்த பெற்றோர்களும் நெகிழ்ந்து பேசினர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here