🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻



*இன்றைய திருக்குறள்*

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
 நடுவொரீஇ அல்ல செயின்.

*மு.வ உரை*
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

*கருணாநிதி  உரை*
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

*சாலமன் பாப்பையா உரை*
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
   - அன்னை தெரேசா

🎋☘🌿🍀☘🌿🍀☘

*இன்றைய மூலிகை*

*நிலவேம்பு*

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words - Parts Of Body*

 Pericardium இதயப்பை

 Eardrum செவி அறை

 Wrist மணிக்கட்டு

 Whiskers மீசை

 Jaw தாடை

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

*கெப்ளர்*

2. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

*ரஷ்யர்கள்*

3.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

*1860*

5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?

*ஜனவரி - 5

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Conjunctions / இணைப்புச் சொற்கள்* இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?

இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைக்க தனித்த ஒற்றை சொல், கூட்டுச்சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச்சொல்:

and

for

because

கூட்டுச்சொற்கள்

as long as

in order that

provided that

இடம் மாறி பயன்படும் சொற்கள்

so ... that

either ... or

not only ... but also

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

காற்புள்ளி (,)
பொருள்களை எண்ணுமிடங்களிலும், விளிமுன்னும் வினையெச்சங்கட்குப்பின்னும், மேற்கோட்குறிகளுக்கு முன்னும், ஆதலால், ஆகவே முதலிய சொற்களுக்குப் பின்னும் காற்புள்ளி இடவேண்டும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*வியாபாரியின் கதை*

 ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது.

 ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.

 மறுநாளே தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.

 அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரிஇ அந்த குருவை வணங்கி சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான்.

  அவன் கீழே வைத்த பணமூட்டையை அந்தக் குரு எடுத்துக் கொண்டு திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.

 குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.

 நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான்.

 குரு அவனைப் பார்த்து மகனே இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.

*நீதி*
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்: தேசிய அளவில் ரூ.399 கோடி நிதியுதவி பெற்று தமிழகம் 2-வது இடம்.

🔮 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் 6 மொழிகளில் வெளியீடு: தமிழை சேர்க்க அரசியல் தலைவர்கள் கோரிக்கை...

🔮 ரெயில் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -ரெயில்வே எச்சரிக்கை.

🔮 லிபியாவில் அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி

🔮 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் இந்தியாவின் அம்பத்தி ராயுடு.

☘🍀🌿☘🍀🌿☘☘

*தொகுப்பு*

T.தென்னரசு
இ.ஆசிரியர்,
தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here