பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, புதன்கிழமை (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கடந்த ஜூன் மாதம், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தத்கல் தனித்தேர்வர்கள் உள்பட), தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, புதன்கிழமை (ஜூலை 10) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள provisional mark sheet - HSE second year result - june 2019 என்ற வாசகத்தில் click செய்து, தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதேபோல், ஜூன் 2019, தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஜூலை 11,12 ஆகிய தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் (விடைத்தாள் நகல் (ஒவ்வொரு பாடத்துக்கும்) -ரூ.275, மறுகூட்டல் (உயிரியல் பாடத்துக்கு - ரூ.305) (ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205) செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 
விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள விண்ணப்ப எண்ணை (application number) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல் பற்றி அறிய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.