வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது.
உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது.அவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என்ற பெயரில் உருவாகிறது.

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here