தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. 
இதையடுத்து தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இதையடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வரும் 15, 16 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 
இரு தாள்கள் கொண்ட மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்.