அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களைநியமிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.


வேலுார் இடைத்தேர்தல் நடத்தை விதியால் 2019 -20 ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு காலாண்டு தேர்வுக்கு பின் நடக்க உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் நிலவியது. பழிவாங்கும் அதிகாரிகள்அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், பதவிஉயர்வுக்கு தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப்பணியாக நியமிக்ககல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள திருவள்ளூர், பெரம்பலுார், ஈரோடு,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பிற்கு பாடம் நடத்துவதுடன், கூடுதலாக பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். இதனால், பணிபுரியும் பள்ளியில் இருந்து மாற்றுப்பணியாக நியமித்த பள்ளிக்கு 10 முதல் 20 கி.மீ., வரை செல்ல வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் துாரம் அதிகம் உள்ள பள்ளிக்கு மாற்றுப்பணியில் அதிகாரிகள் சிலர் நியமிப்பதாக புகார் எழுந்துள்ளது.மாணவர்கள் நலன்இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கே.மகேந்திரன் கூறியதாவது:அரசுப்பள்ளிகளில் காலியாகஉள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அதே தகுதியுள்ள ஆசிரியர்களைத்தான் பணிமாறுதல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பட்டதாரிஆசிரியர்களை மாற்றுப்பணியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கின்றனர். இதனால் கூடுதலாக சம்பள பலனும் இல்லை.

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் நலன் கருதி மாற்றுப்பணியாக செல்ல சம்மதிக்கிறோம். ஆனால் சில முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்குடன், பணிபுரியும் பள்ளியில் இருந்து வெகுதுாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்குகின்றனர். பணிபுரியும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், என்றார்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here