தொலைத்தொடர்பு துறையில்
ஜியோ நிறுவனம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி யாராலும் மறக்க முடியாத ஓன்று. ஜியோவின் வருகையினால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் காண்கின்றனர். ஏற்கனவே பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்ட நிலையில் மீதமுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் BSNL நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது 96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவை வழங்குகிறது BSNL நிறுவனம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமேஅதேபோல் 236 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவை 84 நாட்களுக்கு பெறமுடியும்இந்த சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என தெரிவித்துள்ளது BSNL நிறுவனம். ஆனால், இதில் ஒருசிக்கல் என்னவென்றால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் இலவச அழைப்பு மற்றும் இலவச SMS எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது