🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻*இன்றைய திருக்குறள்*

*குறள் - 104*

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
 கொள்வர் பயன்தெரி வார்.

*பொருள்*

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

எவன் பிறர் நற் செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதுவும் செய்ய முடியாது.
- ஜேம்ஸ் ஆலன்

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி மற்றும் விளக்கம்*

அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்

நாம் அறிந்த விளக்கம் :

அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.

விளக்கம் :

அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Words*

 Gate Keeper வாயிற் காவலர்

 Goldsmith பொற்கொல்லன்

 Groom குதிரைக்காரன்

 Grocer மளிகைக்காரர்

 Hawker கூவி விற்பவர்

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1.வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை
சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான். அது என்ன?

*மக்காச்சோளம்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*இரண்டு தேவதைகள்!*

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.

நீதி :

பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி.

🔮மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு.

🔮மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்.

🔮ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் : ஜம்மு காஷ்மீர் வணிகர்கள் கோரிக்கை.

🔮செய்திபிரான்ஸ் நாட்டில் ஆக.24 முதல் 26-ம் தேதி வரை ஜி7 மாநாடு: சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்பு.

🔮இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

🔮Water level in Yamuna crosses warning mark; Kejriwal urges people to move to safer places.

🔮India largest SO2 emitter in world: Greenpeace.

🔮RBI Governor: Everything isn’t doomed and gloomy about the economy.

🔮ISRO to inject Chandrayaan 2 into lunar orbit tomorrow.

🔮Ahead of Tokyo, Olympic silver-medalist PV Sindhu’s life in manga strips.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪