*தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில், சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக என தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் கட்டுவது தொடர்பாக அரசின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என கூறியுள்ளார்.*