தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 250 கி.மீ.க்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.144.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு, 250 கி.மீ., நீளத்துக்கு ரூ.144.50 கோடியில் சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்' என கடந்த ஜூலை 8-இல் சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். அதன்படி இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதனை பரிசீலித்த தமிழக அரசு மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் ரூ.144.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுச்சுவர் கட்டுவதால், பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர் மற்றும் விலங்குகள் நுழைவது தடுக்கப்படும். பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும். பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் படிப்பைத் தொடரலாம் என ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறியுள்ளார். இந்தப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.111 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.33 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


Join Telegram Group Link -Click Here