டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைத்தாள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு கடந்த 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.50 லட்சம் பேர் எழுதினர். ஒவ்வொரு போட்டித் தேர்வின் போதும் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் அடங்கிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், அண்மையில் நடந்த குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைத்தாள்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஓரிரு நாள்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறுகளோ அல்லது திருத்தங்களோ இருந்தால் அதுகுறித்த உரிய ஆதாரங்களுடன் தேர்வாணையத்துக்குத் தெரிவிக்கலாம். தேர்வர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். தேர்வர்கள் அனுப்பிய ஆட்சேபத்தை டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அமைக்கப்படும் நிபுணர் குழுவானது ஆய்வு செய்து, சரியாக இருக்கும் பட்சத்தில் திருத்தப்பட்ட விடைகளுடன் இறுதி விடைப் பட்டியலை வெளியிடும். ஓரிரு மாதங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here