அண்மையில் சென்னை லீ ராயல் மெரிடியன் ஐந்து நட்சத்திர அரங்கில் விண் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய வழிகாட்டி விருதுகள் வழங்கும் நல்லாசிரியர் விருது, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன், நன்னிலம் ஒன்றியம் கோவில்திருமாளம் தலைமையாசிரியர்  க.சுவாமிநாதன், கோட்டூர் ஒன்றியம் மகாராஜபுரம் தலைமையாசிரியை திருமதி கோ. விஜயலட்சுமி, கோவிந்தநத்தம் தலைமையாசிரியை திருமதி ஆ.வளர்மதி ஆகியோருக்கு விண் நியூஸ் தொலைக்காட்சிக் குழுமத் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக விஞ்ஞானி மயில்சாமி அணணாதுரை, மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, அமைச்சர் ஜெயக்குமார் முதலானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகத் தமிழகம் முழுவதும் உள்ள நல்லாசிரியர் பெருமக்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆசிரியர் திருநாளை முன்கூட்டியே பெரும் திருவிழாவாக, விண் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனமும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தியது வரவேற்கத்தக்க நிகழ்வாகும். சிறப்பு வாய்ந்த இந்த விழாவை தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகளும் ஊழியர்களும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து நடத்தி முடித்தனர்.