காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
09-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 

 குலனுடையான் கண்ணே யுள.

மு.வ உரை:
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

கருணாநிதி  உரை:
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நீ எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பது பற்றி உலகத்திற்கு முக்கியமல்ல. பத்திரமாக கப்பலை கரை சேர்த்தாயா என்பது தான் முக்கியம்
  - சுவாமி விவேகானந்தர்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 
விளக்கம் :
ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

 Nail  நகம்
 Nostril  மூக்குத் துவாரம்
 Vein  நரம்பு
 Nose  மூக்கு
 Pulse  நாடி
✍✍✍✍✍✍✍
பொது அறிவு

1. ஜெட் விமானம், துப்பாக்கி குண்டு , இதில் எதன் வேகம் அதிகம்?

 துப்பாக்கி குண்டு
2. ”பேஸ்பால்” அணி எத்தனை பேரைக் கொண்டது?
 9
📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் -அது என்ன?

   பணியாரம்

2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். அவன் யார்?
  
   தேள்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!

நெல்

🌾 நெல் என்பது புல் வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது.

🌾 நெல் ஈரநிலங்களில் வளரக்கூடிய தாவரமாகும்.

🌾 இப்பயிரின் விதை உமி என அழைக்கப்படுகிறது. நெல்லானது மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட நெல் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. 

🌾 சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல் ஆகும்.

🌾 உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

🌾 ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியத...👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை


முதலையும்,நண்டும்ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.


கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.

அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச் சுருக்கம்.


🔮 இந்தியா- சீனா பஞ்சீல கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்- இந்தியாவிற்கான சீன தூதர்.🔮முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.


🔮தமிழ்நாடு முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை.

🔮20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு... சூரிய மண்டலத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை பின்னுக்கு தள்ளியது சனி கிரகம்.

🔮உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்தியா முதலிடம்.

🔮முதலாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றிமுகமது ஷமியின் வேகத்தில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா.

HEADLINES

🔮James Peebles, Michel Mayor and Didier Queloz get Nobel Prize for Physics.

🔮Rajnath Singh meets Emmanuel Macron to discuss stronger India-France defence ties.

🔮Water wagons stop ferrying Cauvery water to Chennai city.

🔮India, China should resolve disputes peacefully through dialogues: Chinese ambassador.

🔮Mary Kom through to quarter-finals at World Championships
Join Telegram Group Link -Click Here