நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேருவதற்கும், ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு இரண்டாவதாக நடத்தப்படும் நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 2, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருப்பதாக தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செப்டம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெட் தேர்வு விண்ணப்ப பதிவு அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கு அக்டோபர் 16ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை https://ugcnet.nta.nic.in இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram Group Link -Click Here