சென்னை: குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும்.

பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதேபோல குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்

வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முதனிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Join Telegram Group Link -Click Here