அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.

இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிர்த்து, ஆசிரியர்கள் பலர், நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கவுன்சிலிங் நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்றத் தில், சட்டப்பூர்வ அனுமதியை, பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது.

இந்த உத்தரவு கிடைத்ததும், இம்மாதம், 3வது வாரத்தில் கவுன்சிலிங் நடவடிக்கைகளை, பள்ளி கல்வித்துறை துவக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்கில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில், மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது



Join Telegram Group Link -Click Here