காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
09-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
நரியை மிஞ்சிய அணில்
குறள் : 473, அதிகாரம் : வலியறிதல்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம் :
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
கதை :
ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது.
நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன.
இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது.
ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது.
என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது.
நீதி :
மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
நாம் அனைவரும் ஒரு இலட்சியத்தை அடையும்படியான வாழ்க்கையும் ஒற்றுமையுடன் கூடிய சாதி சமய பேதமின்றியும் வாழ வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
நீரில பார்த்தேன் உன் சீரை: உப்புல பார்த்தேன் உன் துப்பை :
விளக்கம் :
பொதுவாக இந்த பழமொழி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும் சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை விளக்கும். மேலும் உப்பு என்பது ஒரு உயிர் நாடி போன்றது. அதனை பாதுகாக்கவும், பயன்படுத்தும் மற்றும் கையாளும் முறையை வைத்து ஒரு பெண்ணின் குடும்ப நிர்வாகத் திறமையை (துப்பு) கண்டறியலாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Spinach - கீரை
2. Sweet potato - சர்க்கரை வள்ளிக் கிழங்கு
3. Radish - முள்ளங்கி
4.Pumpkin - பூசணிக்காய்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. மூளையின் எந்தப்பகுதி மதுவினால் பாதிக்கப்படுகின்றது?
முகுளம்
2. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் யார் ?
கோட்சே
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. சின்னப் பையனும் சின்னப் பொண்ணும் சேர்ந்து கட்டின மாலை: சிக்கில்லாமல் அவிழ்ப்பவருக்கு சென்னைப் பட்டணம் பாதி - அது என்ன ?
தூக்கணாங்குருவிக் கூடு
2. கையிலே கர்ணம் போடும் கணக்கு பிள்ளையார் யார் ?
(அளக்கும்) படி
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
வெங்காயம்
🍊 முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வெங்காயத்தை நம்முன்னோர்கள் உபயோகித்திருக்கிறார்கள்.
🍊 வெங்காயம் ஆசியாவிலிருந்து தான் உருவானதாக கருதப்பட்டாலும் கூட, வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலை முடுக்கெல்லாம் முளைத்துள்ளது.
🍊 இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளனர்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வெளி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
🔮சிவகங்கை அருகே அரசு பஸ் திடீர் நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்.
🔮காற்றாடி பறக்க விட்டாலும் விற்பனை செய்தாலும் சிறை தண்டனை: துணை ஆணையர் எச்சரிக்கை.
🔮பல ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு சிறப்பு வாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகம்.
🔮வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது.
HEADLINES
🔮 Devendra Fadnavis resigns, blames Shiv Sena for Maharashtra crisis.
🔮India to host men’s Hockey World Cup in 2023.
🔮Cyclone ‘Bulbul’, which has intensified into a very severe cyclonic storm, is likely to make landfall between West Bengal and Bangladesh in the early hours of Sunday,
🔮Chennai Police assign women personnel to provide counselling for victims of child sexual abuse.
🔮Banks will stop charging you for NEFT transactions from 2020!.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..