காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
13-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 953
அதிகாரம் - குடிமை
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
மு.வ உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.
கருணாநிதி உரை:
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கற்றலில் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக் கூடாது என்பது எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியமாகும்.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Arrow - அம்பு
2. Axe - கோடாரி
3. Anchor - நங்கூரம்
4. Bow - வில்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
பீகார்
2.பாரதியார் சமாதி எங்குள்ளது?
பாண்டிச்சேரி
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.பார்த்தால் கல் தான்: பல் பட்டால் தண்ணீர் தான் - அது என்ன ?
பனிக்கட்டி
2. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்: வெளியில் வந்தால் விரைவில் மடிவான் - அவன் யார் ?
மீன்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கொத்தமல்லிகீரை
🍀 கொத்தமல்லி ஒரு சிறு செடி வகையைச் சார்ந்தது.
🍀 கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், சமையலுக்கும் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.
🍀 இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன. கொத்தமல்லி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்றன.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இறைவன் அளித்த பரிசு
அக்பர் சபையில் தினமும் பீர்பாலை அரசர் பாராட்டுவதைப் பார்த்து, ஒருவர் மட்டும் பொறாமைப்பட்டார். இன்று எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும் என்றுத் தீர்மானித்தார்.
அவர் சபையில் அமர்ந்துக் கொண்டு பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். அதை பார்த்த அக்பர், தங்களின் சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார்.
அரசர் மிகுந்த சிவப்புநிறம், சபையில் இருக்கும் மற்ற அமைச்சர்களும் சிவப்பு நிறம் கொண்டுள்ளனர். ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறத் தோற்றத்தில் காட்சியளிப்பதைப் பார்த்து, அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன் எனக் கூறினார்.
உடனே எழுந்த பீர்பால், இறைவன் தம்முடைய பக்தர்களுக்கு தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லோரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள். நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே காரணம் என்றார்.
அக்பருக்கு பீர்பால் அளித்த பதிலைக்கேட்டு மனதில் மகிழ்ச்சி தாளவில்லை.
பீர்பால் மீது பொறாமைப்பட்டவர் வெட்கித் தலை குனிந்ததோடு, பீர்பாலிடம் மன்னிப்பும் கேட்டார்.
நீதி :
புத்திசாலிகளிடம் மோதினால் ஆபத்து உனக்குதான்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது
🔮தமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔮வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
🔮குருநானக் தேவின் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை நாம் அற்பணிக்க வேண்டும் என்று மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
🔮காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு.
🔮டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
HEADLINES
🔮Ram Nath Kovind signs proclamation imposing President’s rule in Maharashtra.
🔮Vodafone says future in India could be in doubt without government relief.
🔮UK academics protest as Cambridge scholar told to go back to India.
🔮Kancheepuram Deputy collector prints son's wedding cards on handkerchief to reduce plastic.
🔮Sourabh Verma qualifies for main draw of Hong Kong Open.
🔮Thanks to heavy rains, largest area under paddy cultivation in the last five years in Tiruchy
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..