4 மாவட்டங்களில் மழை : நாகை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை : தேனி, நாகை, கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி, நாகை மாவட்டத்தில் சீர்காழி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி இருந்த நிலையில், இன்று மழை பெய்து வருகிறது.கனமழை நீடித்து வருவதன் காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..