எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆனால், தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்நிலையில், எட்டாம் வகுப்பு தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வி துறையின், தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஏப்., 2 முதல், 10ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க, அட்டவணை தயாரிக்கப் படுவதாகவும், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், பள்ளி கல்வி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.



Join Telegram Group Link -Click Here