டிச.,27, 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்:


உள்ளாட்சி தேர்தல் - புதிய அட்டவணை

1ம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27

2ம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 9

வேட்புமனுக்கள் பரிசீலனை: டிசம்பர் 17

வேட்புமனு திரும்பப்பெற: டிசம்பர் 19

வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2, 2020

  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பாணை தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளை தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையறை செய்த பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கெடு விதித்தது.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போழுது அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.