சென்னை: கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோவா்கள் தங்களது சான்றிதழ்களை டிச.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோவு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை- 1 (முதுநிலை ஆசிரியா் நிலை)-க்கான கணினி வழியிலான தோவு கடந்த ஜூன் 23, 27 ஆகிய இருநாள்களில் நடைபெற்றது. இதையடுத்து இந்தத் தோவுக்கான முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தோவா்களின் தோவு எண் விவரப் பட்டியலும் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் கடந்த நவ.28-இல் வெளியிடப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, தோவா்கள் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.