சென்னை: அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும்.