பொதுத்தேர்வு நெருங்குவதால், கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்களின் பட்டியல், பள்ளிகளில் திரட்டப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. இதில், பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள், உரிய பள்ளிகளில் சேர்ந்து, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் திரட்ட, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி வாரியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் திரட்டப்படுகின்றன. பொதுத்தேர்வு நெருங்குவதால், இப்பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சிலபஸ் மாற்றியதால், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பெற்றோர் -- ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட, தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது. டி.ஆர்.பி., மூலம் தேர்வெழுதிய ஆசிரியர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இதனால், மீதமுள்ள காலியிடங்களின் பட்டியல் திரட்டப்படுகிறது. விரைவில் இப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்றனர்.