கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


கடலூர்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஜனவரி 10ம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 1ம் தேதி கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Join Telegram& Whats App Group Link -Click Here