புது தில்லி: பான் அல்லது ஆதார் எண்ணை இணைக்காத ஊழியர்களிடம் இருந்து 20% டிடீஎஸ் பிடித்தம் செய்யும் வழிமுறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பான் அட்டை இல்லாதவர்கள், வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பான் அல்லது ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வந்தது.

பொதுவாக அனைத்து ஊழியர்களுமே தங்களது பான் எண்ணை நிர்வாகத்திடம் அளித்துவிடுவார்கள். ஒரு வேளை பான் எண்ணை அளிக்க விரும்பாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, பான் அல்லது ஆதார் எண்ணை இணைக்காத ஊழியர்களிடம் இருந்து 20% அளவுக்கு டிடீஎஸ் பிடித்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Join Telegram& Whats App Group Link -Click Here