👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 409

அதிகாரம் : கல்லாமை

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 

 கற்றார் அனைத்திலர் பாடு.

பொருள்:


கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி


கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
 - அப்துல் கலாம்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Empty vessels make much noise.

குறைகுடம் கூத்தாடும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words(Medical)

1. BOT -  தொழில்சார் சிகிச்சை
2. B.pharm - மருந்துகள் தயாரிப்பது
3. BMLT - மருத்துவ உபகரணங்கள் கையாள்வது
4. B.V.Sc - கால்நடை மருத்துவம்
5. B.F.Sc - மீன்வளப் படிப்பு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர் யார்?

 தீவதிலகை

2. பூஜ்ஜியத்தின் தலைகீழி என்ன ?

 தலைகீழி கிடையாது.


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. He cut down the tree with an axe.
2. The baby is just three months old.
3. The answers are at the back of the book.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சூரியகாந்தி

🌻 சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளை தாயகமாக கொண்ட தாவரமாகும். இவை மிகப்பெரிய பூங்கொத்தை உடையவை.

🌻 சூரியகாந்தி குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது.


🌻 18 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன் இந்த எண்ணெயின் பயன்பாடானது அதிகமானது.

🌻தற்போது சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

செயற்கரிய சாதனை

ஒரு நாள் மன்னர் முல்லாவை கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்க எண்ணி, அதைப்பற்றி சபையினரின் கருத்துக்களைக் கேட்டார். முல்லாவை பிடிக்காதவர்கள் எழுந்து நின்று, சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்கு தகுதியானவர் இல்லை என்று தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர்.

அந்த சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த முல்லாவிற்கு அவருடைய எதிரிகளின் பேச்சு காதில் விழுந்தது. உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பது போல நடந்து சபைக்குள் பிரவேசித்தார். அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

மன்னரோ! முல்லாவை பார்த்து சிரித்தவாரே, ஏன் முல்லா ஒரு விலங்கு போல நான்கு கால்களில் நடந்து வருகிறீர், உமக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டார். முல்லா எழுந்து மன்னரை வணங்கி மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை. அதனால் தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்தேன் என்றார். இனி என் அறிவாற்றலை பற்றி யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்றார்.


முல்லாவின் எதிரிகளான பொறாமைக்காரர்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழ்ந்து பரிசுகள் அளித்தார்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

🔮கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, நடப்பாண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

🔮நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

🔮மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு.

🔮கொரோனா வைரஸ் சீனாவின் உவான் நகரின் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவியது என கண்டறியப்பட்டு உள்ளது.


🔮காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகியிருந்த சானியா, தற்போது பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்தும் விலகியுள்ளார்.

HEADLINES

🔮A condemned man cannot fight death penalty endlessly: CJI.

🔮Brexit bill becomes law after receiving royal assent.

🔮Coronavirus: Kerala CM writes to External Affairs Minister over infected nurse in Saudi Arabia.

🔮644 extremists surrender in Assam.

🔮NEET coaching classes will begin soon, says TN School Education Minister.

🔮 velachery
 rail overbridge work resumes, to be ready by April. 

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴