5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொது தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத தேவையில்லை. 20-க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மாணவர்கள் நலன் கருதி அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.