பொதுத்தேர்வு எழுத இருப்பதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.