👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 1061

அதிகாரம் : இரவச்சம்

 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
 இரவாமை கோடி உறும்.


பொருள்:

ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை இலட்சியங்களோ மிகவும் விரிவானவையாக இருந்தால் அவற்றை எட்டிப் பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
 - அன்னை தெரசா

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
கதைக்கு காலில்லை.
A lie has no legs.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Noose - சுருக்குக் கயிறு
2. Nostril - மூக்குத்துளை
3. Nought - ஏதுமின்மை
4. Nuisance - தொல்லை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. சென்னையிலுள்ள மிகப் பழமையான நூலகம் எது ?

 கன்னிமரா நூலகம்

2. இந்தியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படுவது எது?

 சென்னை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. The cattle were fed barley.
2. A bat flying in the sky.
3. The car parking is in the basement.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

வெற்றிலை

🍂 வெற்றிலை என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும்.

🍂 இது மலேசியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

🍂 வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது.

🍂 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக  இந்துக்கள் கூறுகிறார்கள்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உன் கையில் பதில்

ஒரு நாள் ஜென் குரு நடந்து வந்து கொண்டிருக்கையில் சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தன் முதுகுக்குப்பின் தன் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். 

ஜென் குருவைப் பார்த்து அந்தச் சிறுவன் குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா? என்று கேட்டான். 

குரு இறந்து விட்டது என்று சொன்னால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது என்றும், அப்படி இல்லாமல் குரு உயிருடன் உள்ளது என்று கூறினால் தானே அந்தக் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் என்றும் மனதிற்குள்ளேயே முடிவெடுத்து வைத்துக் கொண்டு குருவிடம் கேட்டான். 

இதனை அறிந்த குரு, உன்னுடையக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில் தான் உள்ளது என்று சொல்லிவிட்டுச் சென்றார். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

🔮நிர்பயா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

🔮இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பயங்கரவாத அமைப்புகளை தலைதூக்க விட மாட்டோம் என கூறினார்.

🔮லக்னோவில் தொடங்கியது ராணுவ தளவாட கண்காட்சி:  #PIC OF THE DAY-ல் இடம் பிடித்த பிரதமர் மோடி.

🔮படங்கள்கோலாகலமாக நடைபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

🔮தமிழகம்கல்வித்தகுதி நீக்கம் எதிரொலி: டிரைவிங் லைசென்ஸ் வாங்க விண்ணப்பங்கள் குவிகிறது.

🔮இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

HEADLINES
🔮Nirbhaya case: Centre, Delhi government move Supreme Court against High Court verdict on hanging of convicts.

🔮PM announces Cabinet nod for Ram temple in Ayodhya.

🔮Implement it, observes SC after govt says women should go far ahead of men.

🔮Ind vs NZ | Shreyas ton in vain as New Zealand chase 348 thanks to Taylor century.

🔮Imran Khan slams PM Modi, says 'he committed fatal mistake by revoking special status of Jammu and Kashmir.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴