👆👆👆👆👆👆👆👆
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 923
அதிகாரம் : கள்ளுண்ணாமை
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
பொருள்:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
”தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்”.
-புத்தர்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
Little drops of water make a mighty ocean.
சிறுதுளி பெருவெள்ளம்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
(Gems - இரத்தினங்கள்)
1. Carbuncle - மாணிக்கம்
2. Coral - பவளம்
3. Diamond - வைரம்
4. Emerald - மரகதம்,பச்சை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. விஜயநகர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குவது எது ?
ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
2. வேலூரில் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் எங்குள்ளது?
இராணிப்பேட்டை
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. He shut the door with a bang.
2. The kitchen had a bare cupboard.
3. The plumber worked with an iron bar.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
சவுக்கு மரம்
🌲 சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும்.
🌲 சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும்.கடற்கரைப் பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது.
🌲சவுக்கு வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளரக் கூடிய மரமாக இருப்பதால் வறட்சியான பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
ஒரு நல்ல செய்தி
ஒரு ஊரில் யார் ஒருவர் நல்ல செய்தி கூறினாலும் நல்ல செய்தி சொன்னவருக்கு அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரிடமும் ஒன்றாக சேர்ந்து பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். முல்லா, அந்த மக்களின் ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்கு சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்கு பரிசு தருவதற்காக, உடனே பணம் வசூலியுங்கள் என்று கூச்சல் போட்டார்.
முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.
அந்த அன்பளிப்பு தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்கு தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நீதி :
மூடநம்பிக்கையை வளர்க்கக்கூடாது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் சென்னையை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
🔮வங்காளதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 14 ரோஹிங்யா அகதிகள் பலியாகி உள்ளனர்.
🔮டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🔮அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.
🔮தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
🔮இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
🔮சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.
HEADLINES
🔮U.S. President Donald Trump to visit India on February 24 and 25: White House.
🔮WHO warns of 'very grave' global threat over Coronavirus spread.
🔮China 'commends' Sri Lanka PM Mahinda Rajapaksa's defence of BRI during his India visit.
🔮Sports Ministry set to order inquiry into 'unauthorised' Pakistan trip by kabaddi players.
🔮PM Modi congratulates Arvind Kejriwal for Delhi win.
🔮High-flying Kiwis inflict first ODI series whitewash on India in 31 years.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..