சென்னை : 2020 - 2021 ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்., 14 ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான சில ஆலோசனைகள் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தமிழக சட்டசபையில் பிப்.,14 ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்., 14 காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும். தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரான பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக, சென்னை அடையாறில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அதற்கு பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு போன்ற மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு மட்டுமே முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் இது அதிமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழுமையான பட்ஜெட். இவ்வாறு கூறினார்.


Join Telegram& Whats App Group Link -Click Here