காலை வழிபாடு & வகுப்பறைச்  செயல்பாடுகள்
21-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண் - 14

அதிகாரம் : வான் சிறப்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

 வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக இறப்பது சாலச் சிறந்தது.
 - அண்ணல் அம்பேத்கார்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 


    அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

 Even if the rice is deep, the oven should have three.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words


Agriculture - வேளாண்மை

1. Fertilizer - உரம்
2. Hay - வைக்கோல்
3. Picota - ஏற்றம்
4. Plough - ஏர், கலப்பை


✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21

1. இந்தியாவின் முதல் சுதந்திர போர் எங்கு வெடித்தது ?

 வேலூர்

2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எத்தனை கோட்டைகள் உள்ளன ?

 12 கோட்டைகள்


✡✡✡✡✡✡✡✡
Daily English
Tetra syllabic words
1. academic - ac-a-de-mic
2. activity - ac-ti-vi-ty
3. animated - an-i-mat-ed
4. authority - au-thor-i-ty


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம்!

மீன்

🐠 மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு உயிரினம் ஆகும்.

🐠 மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

🐠 மிகப் பெரும்பாலான மீன்கள் உடலில் செதில் கொண்டவை.

🐠 சில தட்டையாகவும், சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும்.

🐠 சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில பல நிறக் கோலங்களும், கோடுகளும் கொண்டவையாக இருக்கும்.


🐠 மீன்கள் நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினமாகும். சுமார் 22000 வகை மீன்கள் உளள்ன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மாங்கா திருடன்

ஒரு மாந்தோப்பு வழியாக அப்பாவும், மகனும் சென்று கொண்டிருந்தனர். மகன் அப்பாவின் தோளில் அமர்ந்திருந்தான். அவன் தோட்டக்காரனுக்கு தெரியாமல் இரு மாங்காயை திருடினான். விஷயம் அறிந்த அப்பா மகனின் திறமையை அறிந்து மகிழ்ந்தான். மாங்கா என பட்டப்பெயரில் அழைத்தான். சிறுவன் வளர்ந்து வாலிப பருவம் அடைந்தான். அவனோடு சேர்ந்து திருட்டு குணமும் வளர்ந்தது. அரண்மனையில் திருடும் அளவிற்கு துணிந்தான்.

ஒரு நாள் ராணியின் விலை உயர்ந்த வைர மாலை காணாமல் போனது. திருடனைப் பிடிக்க மன்னர் உத்தரவிட்டார். காவலர்கள் காட்டில் ஒளிந்திருந்த மாங்காய் திருடனைப் பிடித்து நகையை மீட்டனர். மன்னர் நடத்திய விசாரணையில் மரண தண்டனை விதித்தார். அவனை கொலைக்களத்துக்கு கொண்டு சென்ற வேளையில் அந்த திருடனின் பெயரோடு சேர்ந்திருக்கும் மாங்காய் பற்றிய விவரம் கேட்டார் மன்னர்.


மன்னா! சிறுவனாக இருந்தபோது என் அப்பாவின் ஆதரவுடன் மாங்காய் தோட்டக்காரனுக்கு தெரியாமல் திருடினேன். அன்று முதல் என் அப்பா மாங்கா என செல்லமாக அழைத்தார். இன்று பெரிய திருடனாகி அதற்கு உரிய விலையாக உயிரையே இழக்கப்போகிறேன் என அழுதான். அதைக்கேட்ட அனைவரும் பிள்ளைகளை சரியாக வழி நடத்த வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தனர்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை மந்திரி ஏகே சசீந்திரன் அறிவித்துள்ளார்.

🔮ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தியுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

🔮நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல் இருக்கும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

🔮தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று நிறைவேறியது.

🔮2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.


🔮பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிக தடை விதித்துள்ளது.


🔮நாளை உலக தாய்மொழி தினம்: 22 மொழிகளில் பேசி கலக்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு...நெகிழ்ந்த பார்வையாளர்கள்.

HEADLINES

🔮Trump's India visit: Not 70 lakh, but one lakh to attend roadshow in Ahmedabad.

🔮COVID-19: China once again changes how new cases are counted in Hubei province.

🔮Tamil Nadu Assembly introduces Bill to declare Cauvery delta a protected agricultural zone.

🔮Pak Cricket Board suspends Umar Akmal pending anti-corruption investigation.


🔮Survivors of Tamil Nadu bus crash, in which 19 died, recollect moments of horror.


Join Telegram& Whats App Group Link -Click Here