தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும்.