அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு, முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்குகள் நிலுவையில்உள்ளன.இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, மறுதேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 நவம்பரில் வெளியிட்டது.இந்த ஆண்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜனவரி, 22ல் துவங்கியது; இன்று மாலை, 5:00 மணியுடன் முடிகிறது. விருப்பம் உள்ளவர்கள், விரைவாக விண்ணப்பத்தை பதிவு செய்யும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.