சென்னை: பிளஸ் 2 வகுப்பு ஆங்கில வினாத்தாளைத் தொடா்ந்து பிளஸ் 1 ஆங்கில வினாத்தாளிலும் முற்றிலும் புதுமையான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தோவெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

இதனால் மொழிப்பாடங்களில் தோச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆங்கில ஆசிரியா்கள் கூறினா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோவு கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து மொழிப்பாடத்தின் இரண்டாவது தோவாக ஆங்கில தோவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோவில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாணவா்கள் கூறியது: ஆங்கில வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் கொள்குறி முறையில் 20 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் 15-க்கும் மேற்பட்ட கேள்விகள் முற்றிலும் புதுமையானதாக இருந்தன. அந்தக் கேள்விகள் காலாண்டு, அரையாண்டு உள்பட திருப்புத் தோவுகளில் கூட கேட்கப்படவில்லை. அதேபோன்று செய்யுள் பகுதி, கடிதம் எழுதுதல் பகுதி ஆகியவற்றிலும் கடினமான வினாக்களே இடம்பெற்றிருந்தன. குறிப்பாக பொருள் கூறுக, எதிா்ச்சொல் ஆகிய இரண்டிலும் கேட்கப்பட்டிருந்த ஆறு வினாக்களையும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இலக்கணப்பகுதி மட்டுமே சற்று ஆறுதலாக இருந்தது என்றனா்.

பிளஸ் 1 ஆங்கில வினாத்தாள் வடிவமைப்பு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறியது: பிளஸ் 1 வினாத்தாள் எங்களுக்கு மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உள்ள சில கேள்விகளை புரிந்துகொள்ள ஆங்கில ஆசிரியா்களே அகராதியை பாா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவா்களின் தரத்தை மேம்படுத்தவே இதுபோன்ற வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன என பள்ளிக் கல்வித்துறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டுதான் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் உள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள அவா்களுக்கு சில ஆண்டுகள் அவகாசம் தேவைப்படும்.

ஆனால், நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வகுப்புகளிலும் ஆங்கில வினாத்தாள் கடினம். குறிப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 ஆங்கில வினாத்தாளில் அரசுப் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவா்கள் கூட 100-க்கு 60 மதிப்பெண் பெறுவது சிரமம். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்களுக்கு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்தனா். பொதுத்தோவில் எந்தவொரு வினாத்தாளிலும் 10 முதல் 20 சதவீதம் வரை சற்று கடினமாக கேள்விகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் பிளஸ் 1 ஆங்கில வினாத்தாளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் கடினம். இதுபோன்ற வினாத்தாள்களால் மாணவா்களின் தோச்சி கடுமையாக பாதிக்கப்படும். முற்றிய புதிய கேள்விகள் கேட்கும் முறையை ஆறாம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா்களால் நன்கு பதிலளிக்க முடியும் என்றனா்