கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது . அதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுதேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன
அதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 30 நிமிடங்கள் தேர்வை தாமதமாக ஆரம்பிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் தேர்வு எழுதவதற்கு தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அறிவுறுத்தியுள்ளனர்