டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது உலகப் போரை விடவும் மோசமாக அதிக மக்களை பாதித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுக்க மனிதகுலம் மீது கொரோனா வைரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பெரும் கவலையோடு உலகம் முழுக்க இது பரவி வருவதை நாம் பார்த்து வருகிறோம். உலகம் தற்போது மிகப்பெரிய சிக்கலை கடந்து கொண்டு இருக்கிறது. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை விடவும் அதிகப்படியான நாடுகள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒரு வைரஸ் காரணமாக இத்தனை நாடுகள் பாதிக்கப்படுவது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க வர வேண்டும். சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்



கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமாக தேவை.

மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்வது மிக முக்கியம். அத்தியாவசிய தேவையன்றி வெளியே செல்ல வேண்டாம்.


மக்கள் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தங்களை தாங்களாகவே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும்.

22 ம் தேதி அன்று காலை 7 மணி முதல் , இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு, அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு வீட்டு வாயிலில் நின்று கொண்டு நன்றி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் , ஊடகத்தினர் அத்தியாவசிய பணிக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும்.

போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருப்போமோ , அப்படி நாம் இருக்க வேண்டும்.

அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும்.

Join Telegram& Whats App Group Link -Click Here