திறனாய்வு தேர்வில் வழங் கப்படும் கல்வி உதவித்தொகை 30 ஆண்டுகளாக மாறாமல் இருப்ப தால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் .

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 1991ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு மாண வர்களுக்கு ஆண்டுதோ றும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது . ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர் . இதில் 50 மாணவர் . 50 மாணவியர் என 100 பேர் தேர்வு செய்யப்படுவர் . அவர்களுக்கு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக ரூ . ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டம் தொடங்கப் பட்டு , 30 ஆண்டுகள் ஆகி றது .

தற்போது 14 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர் . மாணவர்களின் பொருளாதார நிலையம் பன்மடங்கு உயர்ந்துள்ளது . ஆனால் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும் இந்த ஊக்கத்தொகை மட்டும் இது வரை உயர்த்தப்பட வில்லை . கடந்த 1991ல் இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டிற்கு ரூ . 12 ஆயிரமாக இருந்தது . தற்போது அது ரூ . ஒருலட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது . அதேநேரம் ஊக்கத்தொகையில் மட்டும் மாற்றம் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றன


Join Telegram& Whats App Group Link -Click Here