2018-19 நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!!

COVID-19-ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி தாக்கலுக்கான கால நீட்டிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று நிதி மசோதா மீதான பதில் உரையின்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலயில், அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் வீடியோ காண்பிரஷ் மூலம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சீத்தாராமன் கூறியதாவது.... 2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையில் இருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது.

TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். ஜூன் 30, 2020 வரையில் இந்த சலுகை. மற்றபடி இதில் கால நீட்டிப்பு கிடையாது. 'Vivad Se Vishwas' திட்டம் ஜூன் 30, 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் வட்டி கிடையாது. கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியைப் பயன்படுத்தவும், 30,000 கோடி ரூபாய் நிதியுதவியைத் தட்டவும் சீதாராமன் அனுமதித்துள்ளார்.

Join Telegram& Whats App Group Link -Click Here