ஒருநாள் ஊதியப்பிடித்தம் என்பது சில இயக்கங்கள் எடுத்த முடிவு.*

அதற்கு அந்தந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்டுப்படலாம்.

சிலர் தன் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலுத்தாமல் இருக்கலாம் இது அவரவர்களின் விருப்பம்

சில ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்திற்கு மேலாக நேரிடையாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்

நம் விருப்பத்தைக் கேட்காமல் நம்மிடம் ஊதியப்பிடித்தம் செய்ய முடியாது.

இந்தமாத ஊதிய பட்டியல் கருவூலம் சென்றுவிட்டதால், அடுத்த மாத ஊதியத்தில் தான் பிடித்தம் செய்ய முடியும்.

இம்மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் முழு ஊதியம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் அடுத்த மாதத்திற்கான ஊதியத்தில் தங்கள் விருப்ப கடிதம் அளித்தால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்

இவர் என்ன நினைப்பாரோ? அவர் என்ன நினைப்பாரோ? என்று கலக்கம் அடையாமல் உங்கள் மனதிற்கு சரியெனப் படுவதைச் செய்யுங்கள்.


Join Telegram& Whats App Group Link -Click Here