கொரோனா தடுப்பு பணியின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியின்போது தொற்றால் உயிரிழப்பவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும்
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், பிற துறை அலுவலர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்தவர்களின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
சென்னையில் செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை உயர்த்தவும், முடிவுகள் உடனுக்குடன் பெற நடவடிக்கை எடுக்கவும் என்றார்.