'கொரோனா' பாதிப்பை கண்டறிய 'ஆரோக்கிய சேது' செயலியை பயன்படுத்துமாறு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று பொது மக்களின் உடல்நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி 'ஆன்லைன்' வழியாக கணக்கெடுப்பு நடத்த இந்த செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொருவரும் தங்களின் 'ஸ்மார்ட் போனில்' உள்ள 'கூகுள் ப்ளே ஸ்டோர்' பகுதியில் ஆரோக்கிய சேது என்று 'டைப்' செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் உடல்நலனை தெரிந்து கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பு பணிக்கு பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.

Aarogya Setu New App - Direct Link For Download


Join Telegram& Whats App Group Link -Click Here