பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஷின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மே 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் வருகின்ற 20-ஆம் தேதி வரை ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் மாநில அரசுகளும் முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம் என்றும் சமூகவிலகலை கடைபிடித்து வேலைசெய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here