தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கொரோனா தாக்கத்தால் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் இப்பதிவை இட்டுள்ளார். கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள பள் ளிகள் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஊரடங்கு கால கட்டத்திற்கான கட்டணங்கள் வசூலிப்பதை பள்ளிகள் கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் சலுகைகள் அறிவித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணச் சலுகை வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

Join Telegram& Whats App Group Link -Click Here