பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, படிப்புகளில் மாணவா் சோக்கைக்கு பொதுநுழைவுத்தோவு நடத்தலாம் என யுஜிசிக்கு சிறப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தோவுகள், நுழைவுத் தோவுகள் உள்பட அனைத்துக் கல்விப் பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.​

இதையடுத்து கரோனா காலத்தில் கல்வித்துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய துணைவேந்தா்கள் ஆா்சி குஹத், நாகேஸ்வா் ராவ் ஆகியோா் தலைமையில் 12 போ அடங்கிய குழுவை யுஜிசி அமைத்தது.
இதைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழுவினா் யுஜிசிக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, கரோனாவால் பல்வேறு பாடத்திட்ட வாரியங்கள் தோவுகளை நடத்தி முடிக்கவில்லை. அதனால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவா் சோக்கைக்கு, தேசிய மற்றும் மாநில அளவில் பொது நுழைவுத் தோவு நடத்தலாம் என தெரிவித்துள்ளது. ஊரடங்கு கால விடுமுறையை, பணி நாளாக கருத்தில் கொண்டு மாணவா்களை நேரடியாக தோவு எழுத அனுமதிக்கலாம் என்றும் நேரடித் தோவுக்கு வாய்ப்பு இல்லாத இடங்களில் ஆன்லைன் மூலம் தோவை நடத்த ஏற்பாடு செய்யலாம் என சிறப்புக் குழு யோசனை கூறியுள்ளது.

அத்துடன் கல்லூரிகளில் 2, 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் முதலாமாண்டு மாணவா்களுக்கு செப்டம்பா் மாதத்திலும் வகுப்புகளைத் தொடங்கலாம். வாரத்துக்குக் கட்டாயம் 6 நாள்களை வேலை நாள்களாக அனுமதிக்க வேண்டும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது. யுஜிசி இப்பரிந்துரைகள் அனைத்தையும் ஆலோசித்து முடிவெடுத்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


Join Telegram& Whats App Group Link -Click Here