கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி துவங்கும் முனபே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளாங்கோப்பை மலைவாழ்மக்களை சந்திக்கவில்லை என்றும், அங்கு பள்ளி அமைக்கவில்லை என்றும் திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினா் சுப்பராயனின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர், மலைக் கிராமத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி அதற்கான பணிகள் தொடங்கவுள்ளது. பள்ளி அமைக்க வனத்துறையிடம் 50 செண்ட் நிலம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்தப்பகுயில் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது. அந்த மாணவா்களுக்கு தேவையான உணவு பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.